கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஓளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ!நற் றெறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஓளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ!நற் றெறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
இறைவா! இதோ குயில்களும் கோழிகளும் கூவுகின்றன. பறவைகள் குரலெழுப்புகின்றன. சங்கின் ஒலி முழங்குகிறது. கதிரவனின் கதிர்கள் பரவியதால் நட்சத்திரங்களின் ஒளி மங்குகிறது. திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! யாவர்ம் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! வீரக்கழலணிந்த உன் இணையடிகளைக் காட்டுவதற்காகத் திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!

No comments:
Post a Comment