அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே! பள்ளி எழுந்தரு ளாயே!
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே! பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
இறைவா! உன் திருமுகத்தின் கருணை போல் கதிரவன் கிழக்கில் எழுந்துவிட்டான். இருள் மறைந்துவிட்டது. உன் திருவிழிகளைப் போல மலர்ந்த தாமரைப் பூக்களில் வண்டுகள் கூடி மொய்க்கின்றன. திருப்பெருந்துறை இறைவனே! பேரருட் செல்வத்தை எங்களுக்கு அளித்தற் பொருட்டு இன்பமலையாக இருப்பவனே! நீ திருப்பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

No comments:
Post a Comment