போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எமை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எமை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
இறைவா! எங்கள் வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் மூலப்பொருளே! பொழுது விடிந்துவிட்டது, உனது தாமரைப் போன்ற திருவடிகளில் நன்கு பொருத்தமான நறுமண மலர்களைச் சமர்பித்து உன் திருமுகத்தில் மலரும் அருட்புன்முறுவலை மனமகிழ்ச்சியுடன் ஏற்று உன்னை வணங்குகிறோம். சேற்றில் மலரும் செந்தாமரை மலர்கள் சூழ்ந்த வயல்கள் மிகுந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே! நந்திக் கொடியை உடைய நாயகனே! எங்களை ஆட்கொள்ளும் தலைவனே! திருப்பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!
No comments:
Post a Comment